ASP.NET VS ASP.NET Core

உங்களுடைய சந்தேகங்கள் கேள்விகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

பதிவுசெய்க
ASP.NET VS ASP.NET Core
Mishoba Selvarathnam | Developer & Writter

அறிமுகம்

.NET ecosystem மூன்று கூறுகளாக பிரிக்கப்பட்டுள்ளது - .NET Framework, .NET Core, மற்றும் Xamarin App Development Framework.
2016, இல் Microsoft இனால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய framework ASP.NET Core, ஆனால் இது முந்தைய framework ASP.NET, ஐ மேம்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்டதல்ல. முற்றிலும் ஒரு புதிய framework ஆகும்.


ASP.Net என்ன என்பதை பார்ப்போம்.

இது ஒரு web development platform, websites களை உருவாக்க பயன்படுத்தப்படுகின்றது.
HTML, CSS, மற்றும் Javascript ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாகும். இதன் முதல் வெளியீடு 2002 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது HTTP (HyperText Transfer Protocol) commands மற்றும் protocols இல் வேலை செய்யும். Microsoft .Net framework இன் ஒரு பகுதியாகும்.
ASP.Net ஆனது web applications களுக்கு 3 வகையான development styles களை வழங்குகின்றது.
Web Forms : தரவை அணுக கூடிய applications களை develop செய்ய உதவுகின்றது.
ASP.NET MVC : Dynamic websites இற்கான Model-View-Controller
ASP.NET Web Pages : dynamic web page உருவாக்க பயன்படும். server code இனை HTML உடன் விரைவாக இணைக்கின்றது.


ASP.NET Core

ASP.NET Core Microsoft உருவாக்கி வெளியிடப்பட்ட புதிய படைப்பாகும். ASP.NET Core என்பது ASP.NET இன் open-source version ஆகும், இது Mac OS, Linux மற்றும் Windows இல் இயங்குகிறது. ASP.NET Core முதன்முதலில் 2016 இல் வெளியிடப்பட்டது, இது ASP.NET இன் முந்தைய Windows-only version இன் மறு வடிவமைப்பாகும்.


ASP.NET மற்றும் ASP.NET Core இன் வேறுபாடுகள் பற்றி பார்ப்போம்.

  1. Cross-platfrom

    ASP.NET Core ஆனது Cloud environment இல் எந்தவொரு operating system இற்கும் applications களை உருவாக்க Cross-platfrom இனை ஆதரிக்கின்றது. ஆனால் ASP.NET இல் அது சாத்தியமில்லை. ஆகவே, ASP.NET Core ஆனது console applications, web applications, மற்றும் desktop applications ஆகியவற்றை உருவாக்க பயன்படுகின்றது.

  2. WEB STACK

    ASP.NET MVC 5 இல் MVC, மற்றும் Web API இனை தெரிவு செய்வதற்கான விருப்ப தெரிவை வழங்குகின்றது ஆனால் ASP.NET Core இல் MVC, மற்றும் Web API ஆகியவற்றின் single aligned web stack காணப்படுகின்றது.

  3. மொழிகள்

    ASP.NET : C#, Visual Basic, WCF, WBF, மற்றும் WF

    ASP.NET Core : C#, Visual Basic, F#

  4. Compiling

    ASP.NET இல் ஒவ்வொரு தடவையும் code இல் மாற்றம் செய்யும் போதும் மீண்டும் மீண்டும் compile பண்ண வேண்டும் ஆனால் ASP.NET Core இல் browser refresh அந்த வேலையை செய்யும் மீண்டும் மீண்டும் compile பண்ண வேண்டிய அவசியமில்லை.

 

There are no comments yet.
Authentication required

You must log in to post a comment.

Log in