Machine Learning என்பது என்ன? எவ்வாறு படிக்க ஆரம்பிக்கலாம் ?

உங்களுடைய சந்தேகங்கள் கேள்விகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

பதிவுசெய்க
Machine Learning என்பது என்ன? எவ்வாறு படிக்க ஆரம்பிக்கலாம் ?
kavitha pathmanathan | Developer & Writter

 Artificial Intelligence, Machine Learning ஆகிய இரண்டும் நம்முடைய அன்றாட வாழ்க்கையின் கிட்டத்தட்ட ஒவ்வொரு செயலையும் தொட்டுவிட்டன.சாலைகளின் நிலை, சக வாகனங்களின் போக்கு மற்றும் பிற புறச்சூழல்களை ஆராய்ந்து, மோதல், விபத்துகளை கணித்து பாதுகாப்பாக ஓட்டிச்செல்ல, ஓட்டுநர் இல்லா கார்களில் Machine Learning -ன் பங்கு முக்கியமானது. புற்றுநோய் போன்ற கொடிய வியாதிகளை ஆரம்ப காலத்திலேயே கண்டறிதல், கட்டிகளை வகைப்படுத்துதல் போன்ற மருத்துவ சேவைகளிலும் Machine Learning  பயன்படுத்தப்படுகிறது.மிக சமீபத்தில் வெளியிடப்பட்ட ஓர் ஆராய்ச்சி முடிவுகளின் படி, schizophrenia எனப்படும் மனச்சிதைவு நோய்க்கான சிகிச்சையில் Machine Learning  வெற்றிகரமாக பயன்படுத்தப்படுகிறது.

Machine Learning என்பது என்ன?


 இது  1959-ஆம் ஆண்டு ஆர்தர் சாமுவேல் என்பவரால் அவர் ஐ.பி.எம் நிறுவனத்தில் பணியாற்றியபோது முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. இது கணிதம் பாதி கணினி பாதி கலந்து செய்த கலவை.machineக்கு கற்பித்து அதன் அறிவாற்றலை வளர்த்து, அதன் computing power மூலம் அற்புதங்கள் நிகழுத்துவதுதான் Machine Learning - இன் அடிப்படை.இது  தற்போது அதிகமாக வளர்ந்து வருகின்ற ஒரு துறை. ஒரு கணினிக்கு கற்பிப்பது, அதற்கு அறிவு புகட்டுவது, புகட்டப்பட்ட அறிவின் அடிப்படையில் கணினிகளையே முடிவினை மேற்கொள்ளுமாறு செய்வது போன்ற பல்வேறு விஷயங்களை Machine Learning-ல் காணலாம். மனிதன் செய்கின்ற வேலையை வெறும் program  எழுதி கணினியைச் செய்யவைப்பதன் பெயர் Machine Learning ஆகாது. அதன் பெயர் Automation. மனிதனைப் போன்று கணினிகளை யோசிக்க வைத்து, முடிவுகளையும் அதனை வைத்தே எடுக்க வைப்பது, அவ்வாறு எடுக்கப்படும் முடிவுகள் இயந்திரத்தனமாக அல்லாமல் அறிவின் அடிப்படையில் அமைவதற்கு என்னென்ன செய்ய வேண்டும், அவ்வாறு யோசிக்க வைப்பது எவ்வாறு சாத்தியப்பட்டது, அதிலுள்ள வழிமுறைகள் என்ன, கோட்பாடுகள் என்னென்ன என்பது போன்ற அனைத்தையும் விளக்குவதே Machine Learning  ஆகும்.

உதாரணமாக, நாய் என்றால் என்ன? மனிதன் என்றால் என்ன? என்பதை கற்பிக்க, பல்வேறு வகையான நாய்களின் படங்களையும், பல்வேறு விதமான மனிதர்களின் படங்களையும் ஊட்டம் செய்ய வேண்டும். கம்ப்யூட்டரோ, நாய் என்பதற்கு நான்கு கால்கள், தொங்கும் காதுகள், நிமிராத வால், மனிதனுக்கு இரண்டு கால்கள், இரண்டு கைகள் என்பன போன்று அம்சங்களாக பிரித்தாய்ந்து வைத்துக்கொள்ளும். அடுத்த முறை கொடுக்கப்படும் input-ஐ  ஆராய்ந்து அது நாயா, மனிதனா என்று அடையாளம் கண்டுகொள்ளும். இது ஓர் எளிமையான உதாரணம். இதையே சிக்கலான, மனித சக்திக்கு அப்பாற்பட்ட விஷயங்களுக்கு தீர்வு காண Machine Learning -ஐ பயன்படுத்த முடியும்.Machine Learning-க்கு  Data Science,Deep Learning, Artificial Neural Networks போன்ற பல்வேறு கிளைகள் இருக்கின்றன.


தேவையான அடிப்படை திறன்கள் 

 இவற்றையெல்லாம் செய்வதற்கு வெறும் தகவல் தொழில்நுட்ப அறிவோடு மட்டுமல்லாமல், கணிதம், புள்ளியியல் போன்ற மற்ற துறைகளிலும் சிறிது அடிப்படை அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நம்மால் சுலபமாக கணினிக்குக் கற்றுக் கொடுக்க முடியும். மேலும் மாறும் சூழ்நிலைகளுக்கும், தரவுகளுக்கும் ஏற்ப தமது சோதனை முடிவுகளையும், கணிப்புகளையும் மாற்றி வழங்குவதே இயந்திரவழிக் கற்றலின் சிறப்புப் பண்பு ஆகும்.

Machine Learning  க்குத் தேவையான Programming Languages


Machine Learning  Programming-க்கு  R, MATLAB போன்ற பல Programming Languages பயன்படுத்தப்பட்டாலும், மிக பிரபலமான மொழி Python மொழியே.. இது NumPy, SciPy ,Pandals போன்ற பல பயனுள்ள நூலகங்களைப் பெற்றுள்ளது, அவை தரவுகளின் திறமையான செயலாக்கத்திற்கும் சிறந்த அறிவியல்பூர்வ கணிப்பிற்கும் உதவுகின்றன. இது Scikit-learn, Theano, TensorFlow போன்ற சில சிறப்பு நூலகங்களைப் பெற்றுள்ளது, இது வெவ்வேறு கணினி தளங்களைப் பயன்படுத்தி கற்றல் வழிமுறைகளை அனுமதிக்கிறது.

R Programming Language : இது Machine Learning பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் மிகச்சிறந்த கணினிமொழிகளில் ஒன்றாகும். அதிக எண்ணிக்கையிலான வழிமுறைகள் மற்றும் புள்ளிவிவர மாதிரிகள் கொண்ட இது தரவு சுரங்க மற்றும் புள்ளிவிவர கணிப்பிற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நன்றி 

There are no comments yet.
Authentication required

You must log in to post a comment.

Log in
தேட