Kotlin என்னும் programming மொழி, Android இல் ஆதிக்கம் செலுத்துவதன் பின்னணி என்ன ??

உங்களுடைய சந்தேகங்கள் கேள்விகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

பதிவுசெய்க
Kotlin என்னும் programming மொழி, Android இல் ஆதிக்கம் செலுத்துவதன் பின்னணி என்ன ??
Mishoba Selvarathnam | Developer & Writter

அறிமுகம்

Java ஆனது Android operating System இன் முக்கியமான மொழியாக கருதப்படுகின்றது. இதனால் ஒவ்வொரு Android developer களும் Java வை தவிர வேறு மொழிகளை குறைந்த அளவிலேயே பயன்படுத்துகின்றார்கள். பெருமளவான Android applications கள் Java இலேயே develop செய்யப்பட்டும் உள்ளன. ஆனால் தற்போது ஒரு சிறந்த மொழி ஒன்று Java இற்கு மாற்றாக பெருமளவு value packed உள்ளடங்கலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Kotlin இது ஒரு Programming மொழியாகும். இந்த மொழியானது Android development இல் Java இற்கு ஒரு சிறந்த செயல் திறன் மிக்க ஒரு மாற்று மொழியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனாலும் Android developer கள் Kotlin பற்றிய விவாதங்களில் ஈடுபட்டுள்ளனர். Java மொழியானது Android development பயன்பாட்டில் குறைவடையாது என்றாலும் Kotlin மொழி Android development இல் ஒரு ஆதிக்கத்தை செலுத்தும்.



Java ஐ விட Kotlin இல் காணப்படும் மேலதிக சிறப்பம்சங்கள் என்ன என்பதை பார்ப்போம்.

  • Kotlin மொழியானது Java மொழியுடன் வேலை செய்ய கூடிய வகையிலான tools மற்றும் Frameworks உடன் காணப்படுகின்றது.
  • Java ஐ விட Kotlin மொழி தெளிவானதாகவும் சுருக்கமானதாகவும் உள்ளது.
  • Java உடன் ஒப்பிடும் போது Kotlin மொழியானது codes களையும் errorsகளையும் குறைக்க உதவுகின்றது.
  • Kotlin மொழியானது Java ஐ போலல்லாமல் ஒரு சிறப்பான உயர்தரமான compiler உடன் அறிமுகப்படுத்தப்படுள்ளது இதனால் compile மற்றும் run time இல் errors களை சரிபார்க்க உதவுகின்றது.

Java ஐ விட Kotlin மொழி பெரும்பாலான சிறப்பம்சங்களுடன் காணப்பட்டாலும், Android Apps களை உருவாக்க இலகுவான மற்றும் மரபு மொழியாக Java மொழியினையே பலராலும் கருதப்படுகின்றது. ஆயினும், Kotlin மொழியை பற்றிய விவாதம் காணப்படுகின்றது. அதன் காரணம் தான் என்ன?? Kotlin மொழியை Android App development இற்கான மொழியாக Android அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும். மேலும் Google Android ல் Kotlin கு அதிகாரப்பூர்வ ஆதரவை அறிவித்ததிலிருந்து, அது இன்னும் வேகமாக வளர்ந்து வருகிறது. Kotlin மொழியை பயன்படுத்தி Android Apps களை develop செய்ய Android அனைத்து tools களையும் வழங்கியுள்ளது.

இருப்பினும், பெரும்பாலான வணிக நிறுவனங்கள் Java மொழியிலேயே applications களை உருவாக்கியுள்ளனர். அவை அனைத்தும் திடீரென்று Kotlin மொழிக்கு மாறுவது சாத்தியமில்லை. அத்துடன் Java மொழி developer இலகுவில் கிடைக்க கூடியவாறும் உள்ளனர். பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் Java மற்றும் python ஐ தங்கள் மாணவர்களுக்கு அதிக அளவில் கற்பிக்கின்றன. யாரும் Kotlin ஐ கற்பிக்கவில்லை.  Kotlin ஐ கற்பதற்கான போதுமான வளங்கள் காணப்படவில்லை. ஆனாலும் நாளடைவில் Kotlin மொழியுடனான Android Apps கள் market இல் பெரியளவில் மாற்றத்தினை ஏற்படுத்தலாம்.

 

There are no comments yet.
Authentication required

You must log in to post a comment.

Log in