Internet of things என்றால் என்ன?

உங்களுடைய சந்தேகங்கள் கேள்விகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

பதிவுசெய்க
Internet of things என்றால் என்ன?
kavitha pathmanathan | Developer & Writter

IOT என்பது ஆப்ஸ் என்று சொல்லப்படும் புதியவகை மென்பொருட்களைக் கொண்டு நம்முடைய சொந்த உலகத்தை தானியங்கியாக மாற்றும் ஒரு அம்சம். வீடுகளிலும், அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும் இனிமேல் அது தான் புதுமை என்றாகப்போகிறது.அதாவது நம்முடைய கணினி, மொபைல் போன்ற டிஜிட்டல் கருவிகள், வீட்டின் கதவு, மைக்ரோ ஓவன் போன்ற மெக்கானிக்கல் பொருள்கள், நீங்கள், உங்களுடைய வீட்டில் இருக்கும் செல்லப்பிராணிகள் போன்றவை எந்தவித மனித அல்லது கணினி போன்றவற்றின் உதவி இன்றி குறிப்பிட்ட Unique Identifier மூலமாக தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக்கொள்கிற அமைப்பு தான் IOT 

உதாரணம்: நீங்கள் அமெஸானிலிருந்து எதையோ ஆர்டர் பண்ணுகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். இரண்டு நிமிடங்கள் கழித்து அந்தப்பொருள் வேண்டாமென்று அலைபேசியூடு கூறினால் “பொருள் உங்களுக்கு வரும், திருப்பி அனுப்புங்கள்” என்று தான் பதில் வரும், ஏனென்றால் நீங்களும் அந்த மின்கணனியும் உரையாடிக்கொண்டு இருக்கும்போதே அந்தப்பொருள் தயார்படுத்தும் பெல்ட்டிலே அரைக்கிலோமீட்டர் பிரயாணம் பண்ணியாயிற்று. அமெஸான் அதை ஏற்பாடு பண்ணியிருக்கிற மாதிரி அப்படி உங்கள் வீட்டு மின்கணனியிலோ, அலுவலகத்து மின்கணனியிலோ திரையின் அடிப்பகுதியில் அமெஸானிலிருந்து இன்றைக்கு உங்களுக்கு ஆர்டர் விநியோகிக்கப்படப்போகிற நாள் என்று நினைவூட்டல் ஒன்று வந்து வந்து போகும். விநியோகத்துக்கு ஒரு இரண்டு மணித்தியாலத்துக்கு முன்பதாகவும் மீண்டும் ஒரு தடவை அரை மணித்தியாலத்துக்கு முன்பதாகவும் உங்களுடைய டிலிவரி வண்டி வந்துகொண்டிருக்கிறது இன்னும் அரைமணித்தியாலத்தில் அது வந்துவிடும் என்று உங்களுடைய அலை பேசியில் எழுத்து மூலம் ஞாபகப்படுத்தும். இதற்கெல்லாம் அந்த வண்டி சாரதிக்கு நேரம் கிடையாது. ஒரு GPS உபகரணமும் டெலிவரிக் கம்பெனியின் மின்கணனியும் அமெஸானின் மின்கணனியும் இணந்து அந்தப்பணியை மேற்கொள்ளும்.டெலிவரி வேன் வீட்டு வாசலுக்கு வந்ததும் தானாக மீண்டும் ஒரு சமிக்ஞை. இது எல்லாம் தானாக நடக்கும். யாரும் உங்களைக் கூப்பிட மாட்டார்கள். உங்களுடைய டெலிவரி வண்டிச் சாரதி உங்களுக்காகப் பார்த்துக்கொண்டிருக்க மாட்டார், நீங்கள் சொன்ன இடத்தில் பொருளை வைத்துவிட்டு உங்கள் கதவு பெல்லை ஒரு தடவை அமுக்கிவிட்டு அப்படியே தன்னுடைய அலைபேசியில் ஒருபடம் எடுத்து அமேசானில் உங்கள் ஆர்டர் நம்பருக்கு ஒர் கிளிக். அவ்வளவு தான். அரை நிமிடத்தில் அமேசானில் இருந்து உங்களுடைய பொருள் விநியோகித்தாயிற்று இதோ அதற்கு ப்ரூஃப் என்று படத்தோடு கூடிய மின்ஞ்சல் வரும். இவ்வளவுக்கும் யாரும் யாரோடும் பேசியிருக்க மாட்டர்கள், இதற்குப் பெயர் IOT

IOT எந்ததெந்த துறைகளில் பயன்படுகிறது ?


 முந்தைய IT துறையானது குறிப்பிட்ட பெரு  நிறுவனங்களுக்கும்,   குறிப்பிட்ட துறை சார்ந்த பணிகளுக்குமே பயன்பட்டு வந்தது. ஆனால் இன்று நாம் பயன்படுத்தும்  இணையத்தை மட்டுமே அடிப்படையாக கொண்ட IOT தொழில்நுட்பம் நாம் அன்றாடம் பயன்படுத்தும்  Electrical, Electronics உபகரணங்களை Mobile App  மூலமாக இயக்குவது முதற்கொண்டு, தொலைதூரத்திலிருந்து கண்காணிப்பது, அதை கட்டுப்படுத்துவது, தொழிற்சாலைகள் விவசாயத்துறை, போக்குவரத்துதுறை போன்ற அனைத்து துறையிலும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

விவசாயத் துறையில் IOT யின் பயன்பாட்டை பார்த்தோமானால் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான Sensor மண்ணின் ஈரப்பதத்தை தெரிவிப்பது முதற்கொண்டு Google உடன் இணைந்து வானிலை மாற்றத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு தன்னிச்சையாக செயல்படும்.  மனித சக்தியும் மின்சார சக்தியும் தேவையில்லாமல் வீணாக்கப்படுவது தவிர்க்கப்படும்

IOT செயல்படும் முறை

டிஜிட்டல் மற்றும் எலக்டிரானிக்ஸ் கருவிகள் மற்றும் அமைப்புகளில் இருக்கும் சென்சார்கள் மூலமாக IoT பிளாட்பார்ம் உடன் கருவிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இவை இணையத்தின் உதவியுடன் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபடும். மேலும் பல்வேறு கருவிகள் மற்றும் அமைப்புகளிலிருந்து பெறப்படும் தகவல்களை ஒருங்கிணைத்து, நீங்கள் ஏதும் சொல்லாமல் தானாகவே அதிலிருந்து முடிவுகளை IoT ப்ளாட்பார்ம் எடுக்கும்.

தானாகவே முடிவுகள் எனும்போது தற்போதைய தகவல்களை மற்றும் தரவுகளை மட்டும் வைத்து IoT முடிவுகள் எடுப்பதில்லை. நீங்கள் சார்ந்த சாதகமான மற்றும் பாதகமான இதற்கு முந்தைய பல்வேறு தரவுகளையும் ஆய்வு செய்து பெறப்பட்ட தகவல்களை அனலைஸ் செய்து, உங்களுக்குச்சாதகமான முடிவுகளையே எப்போதும் எடுக்கும்.

IOT இன் சாதகங்கள்

  • ஆட்டோமேஷன் என்பது காலத்தின் தவிர்க்க முடியாத தேவை. loT மனித தலையீட்டைக் குறைக்கிறது. பணிகள் மற்றும் சேவைகளின் செயல்திறனை அதிகரிக்கிறது.
  • நெட்வொர்க் வழியாக தரவுகள் மற்றும் தகவல்களைப் பரிமாற்றம் செய்வதில் நேரம் மற்றும் பணத்தின் அளவு பெருமளவு குறைகிறது.
  • தகவலை அணுகுவது எளிதானது. நிகழ்நேரத்தில் பல்லாயிரம் மைல்கள் தொலைவில் உள்ள சாதனத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியும்.
  • இணைக்கப்பட்ட சாதனங்களுக்கு இடையேயான தொடர்பு மிகவும் வெளிப்படையானதாகவும்,எளிதாகவும் மாறும்.
  • மருத்துவம்,போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகளில் IoT யினால் பெருமளவு சாதனைகளை நிகழ்த்த முடியும்.

IoT இன் பாதகங்கள்

  • மனிதனது வாழ்க்கை முறை முழுக்க தொழில்நுட்பத்தால் இயக்கப்படுவதால், மிகச்சிறிய பணிகளுக்குக் கூட தொழில்நுட்பத்தைச் சார்ந்து இருக்கும் அவலம் ஏற்படும்.
  • முக்கியமான தரவுகளை அனுப்பும்போது ஏதேனும் ஒரு கருவியின் குறைபாட்டினால் கூட முழுத் தகவல் மற்றும் ரகசியத் தரவு கசிவு ஏற்படுவதற்கான பெரும் ஆபத்து உள்ளது.
  • ஆட்டோமேஷன் மூலம் மனித உழைப்பிற்கான தேவை குறைகிறது. வேலையின்மை பிரச்னையும் ஏற்படும்.

நன்றி 

There are no comments yet.
Authentication required

You must log in to post a comment.

Log in
தேட