Artificial Intelligence என்றால் என்ன?

உங்களுடைய சந்தேகங்கள் கேள்விகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

பதிவுசெய்க
Artificial Intelligence என்றால் என்ன?
kavitha pathmanathan | Developer & Writter

 

 Artificial Intelligence என்பது கணினி அறிவியலின் மேம்பட்ட வளர்ச்சியை காட்டும் உச்ச நிலையாகும், இது நுட்பமான இயந்திரங்களை உருவாக்கி மனிதர்களைப்போல செயல்பட வைக்கும் ஒரு நுணுக்கமான தொழில்நுட்பம் ஆகும். செயற்கைஅறிவாற்றல் என்பது கொடுக்கப்படும் உள்ளீட்டிற்கு தகுந்ததுபோல் அதுவாகவே செயல்படுவதுதான் செயற்கை நுண்ணறிவு ஆகும்.செயற்கை அறிவாற்றலை சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் கடந்த கால நிகழ்வுகளை வைத்து எதிர்காலத்தில் நடப்பதை கணிக்கக்கூடிய வல்லமை பெற்றது.

இந்தத் துறையானது மனிதர்களின் ஒரு பொதுவான குணத்தைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது, அதாவது நுண்ணறிவு - ஹோமோ செப்பியன்களின் பகுத்தறிவு - இத்தகைய குணத்தை ஓர் இயந்திரத்திலும் வடிவமைக்க முடியும் என துல்லியமாக விவரிக்க முடியும்.இது மனதின் இயல்பு மற்றும் அறிவியல் பெருமிதங்களின் எல்லைகள் தொடர்பான பல சிக்கல்களைத் தோற்றுவித்தது, மேலும் இந்த சிக்கல்கள் பழமைச் சின்னங்களிலிருந்து புராணம், புதினம் மற்றும் தத்துவம் போன்றவற்றால் விளக்கப்பட்டன.செயற்கை நுண்ணறிவானது ஒரு கடினமான நன்னம்பிக்கையின் துறையாக இருந்துவந்தது, இது துரதிஷ்டவசமாக பல பின்னடைவுகளுக்கு ஆளானது ஆனால் இன்று, இது தொழில்நுட்பம் சார்ந்த துறையில் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது, மேலும் கணினி அறிவியலில் பல மிகவும் கடினமான பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் உதவுகிறது.

நாம் அன்றாட வாழ்வில் எளிதாக செய்யும், உதாரணத்திற்கு, பார்ப்பது, புரிந்து கொள்வது,நடப்பது, ஓடுவது என்று பல செயல்களை கணினி கொண்டு செய்து பார்க்க ஒரு கூட்டம்சுத்துகிறது. இதில், நடப்பது, ஓடுவது போன்ற செயல்களை ரோபோவின் மூலம் ஓரளவுசெய்து காட்டிவிட்டனர். ஆனால், முதலில் சொன்ன செயல்களான “பார்ப்பது” மற்றும்“புரிந்து கொள்வது” இன்னும் எட்டாக் கனியாக உள்ளது. நீங்கள் நினைக்கலாம், பார்ப்பதில்என்ன சிரமம்? நமக்கு கண்கள் இருப்பது போல, இரு கேமராக்களை கணினிக்கு கொடுத்துவிட்டால் அதுவும் எளிதாக பார்த்து விடும் தானே? இங்கு பிரச்சனை பார்ப்பதில் இல்லை,பார்க்கும் விஷயத்தை புரிந்து கொள்வதில். சிசிடிவி கேமராக்கள் பொருத்தி விட்டால்வீட்டை கண் விழித்து பாதுகாக்கும். ஆனால், படம் பிடிக்கும் போது அதில் தென்படும்நபர்கள் நல்லவர்களா, திருடர்களா என்பதை சிசிடிவியால் பிரித்து பார்க்க இயலாது.எளிமையாக சொன்னால், சிசிடிவிக்கு புரிந்து கொள்ளும் திறன் கிடையாது.

செயற்கை அறிவாற்றலின் பயன்பாடுகளை அனைத்துத் துறைகளிலுமே காணமுடியும். உதாரணமாக, விவசாயம், தொழில்நுட்பம், கார், ஆட்டோமொபைல், மருத்துவம், பொறியியல், ஆசிரியர்பணி போன்ற அனைத்துத் துறைகளிலும் செயற்கை அறிவாற்றல் முறைகளைப் பயன்படுத்தமுடியும்.


1. ஸ்மார்ட் கார்கள்

இது கூகிளின் சுய-ஓட்டுநர் கார் திட்டத்தையும் டெஸ்லாவின் "தன்னியக்க" திட்டத்தையும் கொண்டுள்ளது. மேலும். செயற்கை நுண்ணறிவானது முதல் வீடியோ விளையாட்டின் கண்டுபிடிப்புக்குப் பிறகு பயன்படுத்தப்பட்டது.

2. மோசடி கண்டறிதல்

மோசடிகளை கண்டறிவதற்கு AI ஐ பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். பல மோசடிகள் எப்போதும் வங்கிகளில் நடக்கின்றன, இவற்றில் 90% AI யின் துணை கொண்டே கண்டறியப்படுகிறது.

3. ஆன்லைன் வாடிக்கையாளர் ஆதரவு

ஆன்லைன் வாடிக்கையாளர் ஆதரவில் AI முக்கிய பங்கு வகிக்கிறது. பல வலைத்தளங்களில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நேரடி அரட்டை விருப்பம் உள்ளது. பொருட்கள் ரீதியான தேவையான உதவிகளை இது நமக்கு வழங்குகிறது, பல சந்தர்ப்பங்களில், நமது சந்தேகங்களுக்கு பதிலளிப்பது உள்ளீடு கொடுக்கப்பட்ட ஒரு கணிணி மட்டுமே ஆகும்,

4. இதயத் தாக்குதல்களை தடுத்தல்

இப்போதெல்லாம் மருத்துவத்துறையில் உயிர்களை காப்பாற்ற AI பயன்படுத்தப்படுகிறது. மருத்துவத் தரவுகளை நுட்பமாக ஸ்கேன் செய்ய இது பயன்படுத்தப்படுகிறது. மேலும், நோயாளிக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் இருந்தால் எளிதில் கணிக்க முடியும்.

5. தயாரிப்பு

செயற்கை நுண்ணறிவு உற்பத்தி நிறுவனத்தில் ஆரம்ப காலத்தில் இருந்தே பயன்படுத்தப்படுகிறது. நாங்கள் வாகனங்கள் மற்றும் மின்னணுவியல் உற்பத்தி பொருட்களுக்கு உபயோகிக்கிறோம். மேலும் உற்பத்தி பொருட்களில் மாற்றங்களை AI ஐ பயன்படுத்தப்படுகிறது.

செயற்கை அறிவாற்றல் ஒரு குழந்தை மாதிரி நல்ல தகவல்களை சொல்லி கொடுத்தால் நல்ல முடிவு எடுக்கும், தவறான தகவல்களை சொல்லி கொடுத்தால் தவறான முடிவு எடுக்கும்.
 

Artificial Intelligence வல்லுநர்கள் கண்மூடித்தனமாக சரித்திரம் மற்றும் சமூக கட்டமைப்பு புரியாமல் தகவல்களை செயற்கை ஆறிவாற்றலுக்கு சொல்லி கொடுத்தால் அது பாரபட்சமான முடிவு எடுக்கும் வாய்ப்பு மிகவும் அதிகம்.இதற்கு முன்பு வந்த தொழில்நுட்பங்களை போல செயற்கை அறிவாற்றல் அதன் படைப்பாளிகள் அறநெறிகளை பிரதிபலிக்கும். செயற்கை அறிவாற்றல் வல்லுனர்களுக்கு மிகுந்த பொறுப்பு உள்ளது.

 

கவிஞர் புலமைப்பித்தனின் வரிகள் “எந்தக்குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே…பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே” செயற்கை அறிவாற்றல் வல்லுநர்களுக்கு இது மிகவும் பொருந்தும்.

There are no comments yet.
Authentication required

You must log in to post a comment.

Log in
தேட