Coding Vs Programming

உங்களுடைய சந்தேகங்கள் கேள்விகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

பதிவுசெய்க
Coding Vs Programming
Mishoba Selvarathnam | Developer & Writter

அறிமுகம்

Software Development துறைகளில் coding, programming இவை இரண்டும் முக்கியமானவையாகும். மற்றும் தொழில்நுட்ப அடிப்படையில் இவை இரண்டும் வேறுபட்டவைகளாகும். 
Computing இன் ஆரம்ப நாட்களில்,  Programming மற்றும் Coding ஆகிய இரண்டும் ஒரே வேலைய குறிப்பிடுகின்றன, அதாவது விஷயங்களை செய்ய கணினியை கட்டளையிடும் ஒருவர். இருப்பினும், வணிக உலகம் இரண்டு துறைகளையும் மறுவரையறை செய்து, Programmers களையும் coders களையும் வேறுபடுத்தியுள்ளது.  Application Development இல் ஆர்வமுள்ள எந்தவொரு நிறுவனத்திலும் இவை இரண்டும் அவசியமாகின்றது.

Coder : நாம் சொல்ல விரும்புவதை ஆங்கிலம் போன்ற மொழியில் எடுத்து அதனை Python, Java போன்ற Technical மொழிகளில் மொழி பெயர்க்கும் ஒருவராவார். இந்த வகையில் coding இன் செயல்முறை என்ன ? ஒரு குறிப்பிட்ட செயலை இயக்கும் ஒரு script எழுதுவதாகும். coding ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு coding ஐ உருவாக்குவதாகும், அதாவது நாம் சொல்ல நினைப்பதை Technical மொழிகளை பயன்படுத்தி coding எழுதப்பட்டு சில applicationsகளை உருவாக்குவதாகும். உதாரணமாக : Web application, Desktop applications, mobile applications, etc.

Programming என்பது எந்தவொரு பிழையும் இல்லாமல் செயல்படுத்தக்கூடிய இயங்கக்கூடிய Machine level program ஐ உருவாக்கும் செயல்முறையாகும். இது முறையாக coding களை எழுதும் செயல்முறையாகும்.

Software Program ஒன்றை வடிவமைப்பதற்காக பல வரிகளில் coding எழுதப்படும். அதேவேளை, programming என்பது coding மட்டுமல்லாமல், algorithm இனை பகுப்பாய்வு செய்து செயல்படுத்துதல், Data structure ஐ விளங்கிக் கொள்வது, சிக்கல்களை தீர்ப்பது மற்றும் பலவற்றை உள்ளடக்கியதாகும். Programmers, பொதுவாக தொழில்நுட்ப எண்ணங்கள் மற்றும் பகுப்பாய்வு திறன்களை கொண்டவர்களாவர்.

அனைத்து Programmers களும் coders , ஆனால் எல்லா coders களும் Programmers அல்ல!
இலகுவாக சொல்வதானால் Programming ஒரு புத்தகத்தை உருவாக்குவது, coding ஒரு அத்தியாயத்தை எழுதுவதாகும்.
 

There are no comments yet.
Authentication required

You must log in to post a comment.

Log in