Single Page Application மற்றும் Multi Page Application

உங்களுடைய சந்தேகங்கள் கேள்விகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

பதிவுசெய்க
Single Page Application மற்றும் Multi Page Application
Mishoba Selvarathnam | Developer & Writter

அறிமுகம்:

Web apps களை உருவாக்க இரண்டு வழிகள் உள்ளன: single-page applications மற்றும் multi-page applications கள்.

   1. Single-Page Applications (SPA):

  • Single-page application என்பது app development இற்கான நவீன அணுகுமுறையாகும், இது Google, Gmail, Facebook, Twitter மற்றும் பலவற்றால் பயன்படுத்தப்பட்டது. ஒரு SPA என்பது ஒரு browser இற்குள் செயல்படும் ஒரு app ஆகும், மேலும் பயன்பாட்டின் போது page reloading தேவையில்லை.
  • Single Page Applications AJAX மற்றும் HTML5 ஐப் பயன்படுத்துகின்றன. JS frameworks கள் (React, Angular, Vue மற்றும் Ember) SPA க்காக client-side பக்கத்தில் உள்ள கடுமையான சவால்களை செயலாக்குவதற்கு பொறுப்பாகும்.

   2. Multi-Page Application (MPA):

  • Multiple page application, என்பது ஒரு web application ஆகும், இது ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களை உள்ளடக்கியது. Multi-page design முறைக்கு ஒவ்வொரு முறையும் உள்ளடக்கம் மாறும்போது ஒரு பக்கத்தை மீண்டும் reload செய்ய வேண்டும். விரிவான தயாரிப்பு portfolios களைக் கொண்ட பெரிய நிறுவனங்களுக்கு இது ஒரு option ஆகும், எடுத்துக்காட்டாக, e-commerce businesses.
  • Single-Page Applications களுடன் ஒப்பிடுகையில், MPA கள் உருவாக்க பெரியதாகவும் சிக்கலானதாகவும் தோன்றுகின்றன. எடுத்துக்காட்டாக, Amazon, eBay, அல்லது பல பக்கங்களைக் கொண்ட வேறு எந்த சிக்கலான site களை சொல்லலாம்.
  • Multi-Page Applications கள் பாரம்பரிய முறையில் செயல்படுகின்றன. அவை தேவைக்கு மேலதிகமான மிகப் பெரியவை. MPA கள் பொதுவாக ஒரு பெரிய அளவிலான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கின்றன, எனவே அவை பொதுவாக பல levels கள் மற்றும் பல்வேறு links களைக் கொண்டுள்ளன. அவற்றில் பல micro-websites கள் மற்றும் subsections களும் கொண்டிருக்கலாம்.

SPA மற்றும் MPA இரண்டிற்குமான பண்புகளை ஒப்பிட்டு பார்ப்போம்.

   1. Speed

  • Application Development இல் வேகம் ஒரு முக்கியமான காரணியாகும். Users பெரும்பாலும் அதிக நேரம் load ஆகும் websites களை விரும்புவதில்லை. SPA page வேகமாக  load ஆகும் ஏன் ?? பெரும்பாலான applications கள் ஒரு முறை மட்டுமே reload செய்யப்படும். User ஆல் புதிய தரவு கோரப்படும்போதெல்லாம் பக்கம் முழுவதுமாக மீண்டும் reload செய்யப்பட மாட்டாது.
  • User புதிய தரவை பெற்றுக்கொள்ள விரும்பும்போதோ அல்லது website வேறு பகுதிக்கு நகர முற்படும் போதோ browser முழு பக்கத்தையும் புதிதாக மீண்டும் reload செய்ய வேண்டும் என்பதால் MPA மெதுவாக செயல்படும். ஒரு website இற்கான உகந்த reload நேரம் 0.4 வினாடிகள். ஒரு website அல்லது app ஆனது அதிக image-heavy ஆக இருந்தால், SPA ஐத் தேர்ந்தெடுப்பது உகந்த தேர்வாகும்.

   2. Coupling

  • Single-page applications கள் தரவைப் படிக்கவும் காண்பிக்கவும் server-side developers களால் உருவாக்கப்பட்ட API களைப் பயன்படுத்துகின்றன. MPA இல், front-end மற்றும் back-end ஆகியவை ஒன்றுக்கொன்று சார்ந்தவை. அனைத்து coding முறையும் பொதுவாக ஒரு project இன் கீழ் உள்ளன.

  3. Search Engine Optimization

  • SPA இன் பலவீனங்களில் ஒன்று SEO ஆகும். பெரும்பாலான single-page applications கள் பெரும்பாலான search engines களில் support செய்யாத JavaScript இல் இயங்குவதே முக்கிய காரணியாகும்.
  • ஒவ்வொரு பக்கமும் வெவ்வேறு keywords களுக்கு உகந்ததாக இருப்பதால் MPA சிறந்த website நிலைப்பாட்டை செயல்படுத்துகிறது. மேலும், ஒவ்வொரு பக்கத்திலும் meta tags களை சேர்க்கலாம் - இது கூகிள் தரவரிசைகளை சாதகமாக பாதிக்கிறது.

 4. User Experience

  • ஒரு application ஒன்றை உருவாக்கும் போது சிறந்த user experience முக்கியமான பண்பாகும். SPA கள் mobile-friendly ஆனவை. Google கூட desktop இல் mobile experience இற்கு முன்னுரிமை கொடுக்கத் தொடங்கியுள்ளது. SPA development இல் பயன்படுத்தப்படும் Frameworks கள் mobile apps களை உருவாக்க உங்களுக்கு உதவுகின்றன.
  • MPA இன் மூலம், நீங்கள் தேவைக்கேற்ப பல பக்கங்களை உருவாக்கலாம், மேலும் எந்தவொரு limits களும் இல்லாமல் உங்களுக்குத் தேவையான தகவல்களை ஒரு பக்கத்தில் சேர்க்கலாம். தெளிவான Navigation bar உள்ளது. எனவே, user இலகுவாக website இல் அவர்களுக்கு தேவையான பக்கத்தை பெற்றுக்கொள்ளலாம், அவர்களது அனுபவத்தை இது சாதகமான முறையில் இலகுவாக்குகின்றது.

       

5. Security

  • ஒரு MPA க்குச் சென்றால், ஒவ்வொரு webpage ஐயும் பாதுகாக்க வேண்டும்.
  • ஒரு SPA இல், உங்கள் பக்கத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பாதுகாப்பான தரவு endpoints, அவை மிக வேகமானவை ஆனால் பாதுகாப்பானவை அல்ல. SPA கள் hacker தாக்குதல்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன, ஏனெனில் அவை JavaScript இல் இயங்குகின்றன, இது code compilation ஐ செய்யாது ஆகையால் malware தாக்குதலுக்கு உள்ளாக கூடியதாகும்.

6. Development process

  • SPA இன் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று reusable backend code. Reusable code ஆனது application development இல் குறைவான வேலைகளைக் கொண்டுள்ளது. உங்கள் web app இல் நீங்கள் பயன்படுத்திய அதே code ஐ உங்கள் native mobile app இலும் பயன்படுத்தலாம். mobile devices களில் applications களும் websites களும் அடிக்கடி பயன்படுத்தப்படுவதால் இது ஒரு முக்கியமான ஒன்றாகும்.
  • MPA இன் development இற்கு அதிக நேரம் எடுக்கும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், server-side இற்கு ஆரம்பத்தில் இருந்தே code எழுத வேண்டும்.

எந்த ஒன்றை தெரிவு செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும்போது, உங்கள் தேவைகளுடன் உங்கள் வணிக இலக்குகளையும் எப்போதும் மனதில் வைத்திருக்க வேண்டும்.

உங்கள் mobile app ஐ உருவாக்க பயன்படுத்தக்கூடிய வேகம் மற்றும் code reusability அடிப்படையில் SPA வெற்றி பெறுகிறது, ஆனால் இது SEO optimization இல் குறைபாடுகளைக் கொண்டுள்ளது. ஒரு MPA ஐப் பயன்படுத்துவது Google இல் உயர்ந்த இடத்தைப் பெற உதவும், மேலும் இது SPA ஐ விட மிகவும் மெதுவானது.
Social networking applications, SaaS platforms களில் SPA கள் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகின்றன.

E-commerce apps, business catalogs மற்றும் marketplaces களில் MPA கள் சிறந்த முறையில் பயன்படுத்தப்படுகின்றன. நீங்கள் பலவகையான தயாரிப்புகளை வழங்கும் ஒரு பெரிய நிறுவனமாக இருந்தால், MPA உங்களுக்கு சிறந்த தேர்வாகும்.

  • Nakanathan Vinoth Avatar
    Nakanathan Vinoth - 10 மாதங்கள் முன்
    Sir kastappaddavarkalum erukkagka free ya ellam kudukkalame

  • Appslanka dev Avatar
    Appslanka dev - 10 மாதங்கள் முன்
    கஷ்டத்தில் இருக்க கூடிய மாணவர்களுக்கு உதவி புரிவதில் மகிழ்ச்சி நண்பா!, எங்களுடைய ஈமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Authentication required

You must log in to post a comment.

Log in