Andriod Application Development

உங்களுடைய சந்தேகங்கள் கேள்விகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

பதிவுசெய்க
Andriod Application Development
Mishoba Selvarathnam | Developer & Writter

அறிமுகம்

Android application தற்போது market இல் மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. ஒவ்வொரு வணிக நிறுவனங்களும் web applications பயன்படுத்தும் போதும் android applications இனையும் கட்டாயமாக தமது வணிக பயன்பாடுகளுக்காக எடுத்துக்கொள்கின்றது.


Android எனப்படுவது யாது ?

Android என்பது ஒரு open source மற்றும் Linux kernel ல் இயங்கக்கூடிய mobile சாதனங்களுக்கான அதுவும் முதன்மையாக touch screen உடன் கூடிய mobile சாதனங்களுக்காக உருவாக்கப் பட்ட ஒர் Operating System ஆகும்.

இது பயனர்களுக்கு பல்வேறு வகையிலான பயன்பாடுகளை வழங்குகிறது. பொதுவாக google சேவைகளான youtube, Gmail, google maps மற்றும் search engine, இன்னும் பல வசதிகளை வழங்குகின்றது.

பயனர்கள் கணினியைப் பயன்படுத்துவது போலவே வீடியோக்களைப் பார்க்கலாம், audio clips களைக் கேட்கலாம், மின்னஞ்சல்களைப் பார்க்கலாம்,  மின்னஞ்சல்களை அனுப்பலாம், இன்னும் பல கணினியில் உள்ளதைப் போன்ற பல செயல்பாடுகளைச் செய்யலாம்.


Android app development

Android ஆனது mobile apps களை உருவாக்குவதற்கான தளத்தை வழங்குகின்றது. Android ஆல் இயக்கப்படுகின்ற மொபைல் சாதனங்களில் மட்டுமே Android இல் உருவாக்கப்படும் app களைப் பயன்படுத்த முடியும்.

Android software development என்பது Android operation system இனை இயக்கும் சாதனங்களுக்கு புதிய பயன்பாடுகள் உருவாக்கப்படும் செயல்முறையாகும். Android Software Development Kit  (SDK) இனைப் பயன்படுத்தி "Kotlin, Java மொழிகளைப் பயன்படுத்தி android apps களை எழுதலாம்" அதே நேரத்தில் மற்ற மொழிகளையும் பயன்படுத்துவது சாத்தியமாகின்றது.

Android Studio ஆனது Android Developmenat இற்கான உத்தியோகபூர்வமான IDE (Integrated Development Environment) ஆகும். அத்துடன் இது Android app development இற்கு தேவையான அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது.  Android versions ஒவ்வொன்றும் இனிப்பு வகையான cupcake, Donut, Eclair, Froyo, Gingerbread, Honecomb, Ice Creame Sandwich போன்ற பெயர்களைக் கொண்டுள்ளது.

Android app development இற்காக Java மற்றும் Kotlin ஆகிய மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன. இருந்தாலும் Playstore இலுள்ள பெரும்பாலான apps கள் Java மூலமாகவே மேம்படுத்தப்பட்டுள்ளன.

Android Software Development Kit  (SDK)

Android SDK என்பது development tools களின் தொகுப்பாகும். Android platform இற்கான applications களை உருவாக்க பயன்படுகிறது.

Android SDK இல் :

  • Required libraries
  • Debugger
  • An emulator
  • Relevant documentation for the Android application program interfaces (APIs)
  • Sample source code
  • Tutorials for the Android OS

ஆகியன உள்ளடங்குகின்றன.

தற்போது Android Studio வின்  Version 4.0 அண்மையில் வைகாசி 2020 இல், வெளியிடப்பட்டது. அதில் சில புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. அதைப்பற்றி பார்ப்போம்.

  • Motion editor

        

  • Build speed view

  • Live layout inspector

  • Layout multi preview

  • Kotlin DSL scripts files

  • smart editor for R8 rules.

Android studio பற்றி சிறிய விளக்கத்தை பெற்றிருப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி .

There are no comments yet.
Authentication required

You must log in to post a comment.

Log in